Playlist - Recent News
Tune In Now

Latest Albums

Request To Dedicate a Song

Latest Artist

Recent News
 • அடுத்த எதிர்பார்ப்பு படம் எது ?

  தமிழ்த் திரையுலகில் பெரி நடிகர்கள் நடிக்கும் படங்கள்தான் வழக்கமாக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'புலி' படம் திரைக்கு வந்துவிட்டது. அடுத்து எந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனப் பார்த்தால் தற்போதைக்கு மூன்று படங்களைச் சொல்லலாம்.

  அதில் முதலில் ...

 • செட்டிநாடு அரண்மனையில் கபாலி படப்பிடிப்புக்கு எதிர்ப்பு: திடீர் பரபரப்பு

  சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தை அட்டக்கத்தி ரஞ்சித் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னயில் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாட்டு அரண்மனையில் நடந்து ...

 • சினிமாவை விட்டு ஒதுங்க பார்வதி மேனன் முடிவு

  சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் வெற்றியால் கேரளாவே விழா கொண்டாடிக்கொண்டிருக்க, படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய தூணாக விளங்கிய பார்வதி மேனனோ கொஞ்சநாளைக்கு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்க முடிவ செய்துள்ளாராம். எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், தனக்கு கதை ...

 • ஐபோன் 6S மாடல் அறிமுக விழாவில் சித்திக்-லால் பட ஸ்க்ரிப்ட் பரிமாற்றம்..!

  சில மாதங்களுக்கு முன்பு கமல் தனது உத்தமவில்லன் படத்தின் ஆடியோவை, ட்ரெய்லரை ஆன்லைனில் அப்லோட் செய்து அதை மும்பையில் இருக்கும் ஸ்ருதி பெற்றுக்கொள்ளுமாறு செய்து ஆச்சர்யப்படுத்தினார் அல்லவா..? அதேபோன்ற, ஆனால் டெக்னாலஜியின் வேறொரு புதிய பாணியை கையாண்டு தங்களது பட துவக்க விழாவை நடத்தியிருக்கிறார்கள் மலையாள இரட்டை இயக்குனர்களான ...

 • ராஜமவுலியின் 1000 கோடி மெகா பட்ஜெட் படத்தில் மோகன்லால்

  இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் கவனம் எல்லாம் இப்போது பாகுபலி-2 ரிலீஸில் தான் என்றாலும் அடுத்தடுத்த அவரது மெகா பட்ஜெட் புராஜெக்ட்டுகளும் வரிசைகட்டி நிற்கின்றன. அதில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் ஆகிய இருவரையும் வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கவுள்ளார் ராஜமவுலி. ஆனால் இதையெல்லாம் தாண்டிய மெகா பட்ஜெட் படம் இயக்கும் ...

 • விண்வெளியில் 'ட்ரெய்லர்' ரிலீஸ் ; குஞ்சாக்கோ போபன் படம் சாதனை..!

  டைட்டிலிலேயே குழப்பத்தை உண்டுபண்ணி, அதன்மூலம் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதில் மலையாள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் புது ரூட்டை கையாளுபவர். இவர் இதற்கு முன்னர் இயக்கிய 'நார்த் 24 காதம்', மற்றும் 'சப்தமஸ்ரீ தஸ்கரா' ஆகிய படங்களிலும் இதே டெக்னிக்கை கையாண்டு இருந்தார். இந்த இரண்டு படங்களில் இவர் காட்டிய ஸ்டைல் தான் ...

 • மீண்டும், மீண்டும் வருகிறார் கர்ணன்

  சிவாஜி, பத்மினி நடித்த கர்ணன் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கி இருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்து இருந்தார். சிவாஜியின் சினிமா வாழ்க்கையின் மயில்கல்லாக இருந்த படம் அப்போதே வெள்ளி விழா கண்ட படம். கடந்த 2013ம் ஆண்டு கர்ணன் படத்தை டிஜிட்டல் மயமாக்கி, புதிய நவீன ஒலிசேர்ப்புடன் வெளியிட்டார்கள். அப்போதும் 100 நாட்கள் ஒடி சாதனை ...

 • காந்தி ஜெயந்தி: சென்னை தியேட்டர்களில் காந்தி படத்தை இலவசமாக பார்க்கலாம்

  தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாளை (அக்டோபர் 2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், காந்தி சர்வசமைய பிரார்த்தனை மையமும் இணைந்து ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட், அட்டன்பரோ இயக்கி, கிங்ஸ்லி நடித்து, பல ஆஸ்கர் விருதுகளை ...

 • இன்று வெளியாக இருந்த கத்துக்குட்டி படத்துக்கு தடை!

  நரேன், சிருஷ்டி டாங்கே, சூரி நடித்துள்ள கத்துக்குட்டி படம் இன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. "வீரமா வர்ற புலியையும் பாருங்க, ஓரமா வர்ற எங்களையும் பாருங்க" என்று கேட்சிங்காக விளம்பரமும் செய்திருந்தார்கள். ஆனால் தற்போது படத்தை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

  படத்தை திரையிட தடைகேட்டு நிலா சாட்சி என்ற தயாரிப்பு ...

 • சினிமா தயாரிப்புக்கு கடன் உதவி செய்ய தயார்: தோஹா வங்கி அதிகாரி தகவல்

  கத்தார் நாட்டைச் சேர்ந்தது தோஹா வங்கி. இதன் தலைமை செயல் அதிகாரியாக கும்பகோணத்தைச் சேர்ந்த டாக்டர் சீத்தராமன் இருக்கிறார். இந்த வங்கிக்கு மும்பை மற்றும் கொச்சியில் கிளை உள்ளது. விரைவில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் கிளை தொடங்க உள்ளது. இதையொட்டி இந்தியா, கத்தார் பரஸ்பர வர்த்தக வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கம் ஒன்றை தோஹா வங்கி ...

 • சென்னையில் முடிஞ்சா இவன புடி படப்பிடிப்பு

  லிங்கா படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் கன்னடப் படத்தில் சுதீப், நித்யா மேனன் நடிக்கிறார்கள். இந்தப் படம் ஒரே நேரத்தில் கன்னடம், தமிழ் மொழியில் தயாராகிறது. நான் ஈ, புலி படங்களில் வில்லனாக நடித்துள்ள சுதீப் ஹீரோவாக நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இது.

  போக்கிரி , பூஜை படங்களில் நடித்த முகேஷ் திவாரி இப்படத்தில் ...

 • வேதாளம் டீஸர் வெளியீடு தள்ளி வைப்பு ஏன்?

  தொழில் ரீதியில் போட்டியாளர்களாக விளங்கும் விஜய்யும், அஜித்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். கடந்த வருடம் விஜய்க்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தினார் அஜித். அதே நேரம் விஜய்யும், அஜித்தும் திரையுலகில் எதிர் எதிர் துருவங்களாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றனர். புலி படத்தின் டிரெய்லர் சில ...

 • சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்களின் ஆதரவு

  ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் நேற்று முதலே புலி படம்தான் பரபரப்பு செய்தி. புலி படத்தின் ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னதாக வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியதால் நிலைகுலைந்துபோனது புலி படக்குழு. புலி படத்தின் நாயகன் விஜய் தொடங்கி அப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள். பைனான்சியர் என எவரையும் விட்டு ...

 • ஐ.நா மனித உரிமை ஆணைய அரங்கில் போர்க்களத்தில் ஒரு பூ

  ஈழ ஊடகவியலாளரான இசைப்ரியாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் - போர்க்களத்தில் ஒரு பூ. சில மாதங்களுக்கு முன் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இந்தப் படத்துக்கு சான்றிதழ் தர மறுத்துவிட்டது தணிக்கைக்குழு. சான்றிதழ் தர மறுத்தது மட்டுமல்ல, இசைப்ரியா கற்பழிக்கப்பட்டதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறதா என்ற அபத்தமான கேள்விகள் ...

 • கஞ்சே படத்திற்கு யு/ஏ சான்று

  பாகுபலி படத்திற்கு பின்னர் டோலிவுட் ரசிகர்கள் மீண்டும் ஒரு சரித்திர பயணத்திற்கு தயாராகி வருகின்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள கஞ்சே படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் பாடல்களும் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள கஞ்சே படத்தில் நாயகனாக ...

 • பவர் ஸ்டார் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான சர்ச்சை இயக்குனர்

  டுவிட்டரில் தனது இருப்பை சர்ச்சைகளாலும் சண்டைகளாலும் அடிக்கடி நிரூபிக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, டுவிட்டரில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளார். டோலிவுட்டின் பிரபல நடிகரும் அரசியல் பிரபலமுமான பவன் கல்யாணின் ரசிகர்கள் பலத்தினை நடிகர் மகேஷ் பாபுவின் ரசிகர்களுடன் ஒப்பிட்டு இரு தரப்பினரிடையே சண்டையைத் ...

 • கத்தி தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி!

  நடிகர் விஜய் இரு வேடங்களில் நடித்த கத்தி திரைப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் திரைக்கு வந்து வசூலிலும் சக்கை போடு போட்டது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்த கத்தி திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாகக் கூறப்பட்டது. கத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக பிரபல நடிகர்கள் ...

 • நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணிக்கு கமல் ஆதரவு

  நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கதேர்தலில் விஷால் அணிக்கு, நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போதுள்ள தலைவர் சரத்குமார், ராதாரவி மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி இளம் நடிகர்கள் விஷால் தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிட உள்ளனர். இரு ...

 • விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் அதிரடி ரெய்டு ஏன்.? - முழு விபரம்!

  சென்னை: தமிழ், தெலுங்கு, இந்திமொழிகளில், இன்று வெளியாக உள்ள, புலி படத்தின் நாயகன் நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வீடுகளில் வருமான வரித் துறையினர், நேற்று சோதனை நடத்தினர். தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள இவர்களது வீடுகளில், 300க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் பல குழுக்களாக ஒரே ...

 • பிரமாண்டமான அரங்குகளில் படமாக்கப்படும் பிரமோற்சவம்

  டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரமோற்சவம் படத்தில் நடிக்கின்றார். இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படத்தில் நடிகைகள் சமந்தா, பிரனிதா, காஜல் அகர்வால் அகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். வண்ணமயமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் பிரமோற்சம் ...